search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாய பயிர்"

    கொடைக்கானல் மேல்லைப்பகுதியில் விவசாய பயிர்களை காட்டு பன்றிகள் நாசம் செய்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    திண்டுக்கல்:

    கொடைக்கானல் மேல்மலை பகுதியான மன்னவனூர், கவுஞ்சி, பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் கேரட், பூண்டு, பீன்ஸ் ஆகிய காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.

    கடந்த 4 ஆண்டுகளாக பருவமழை போதிய அளவு பெய்யாததால் விவசாயிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி வந்தனர். குறிப்பாக பூண்டு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இருந்தபோதும் தொடர்ந்து விவசாயம் செய்து வருகின்றனர்.

    இந்த கிராமங்களை ஒட்டி உள்ள வனப்பகுதியில் யானை, காட்டு பன்றி, முயல், காட்டெருமை ஆகிய வன விலங்குகள் வசித்து வருகின்றன. இவை அடிக்கடி விவசாயம் மற்றும் குடியிருப்பு பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    கவுஞ்சி கிராமத்தில் திடீரென 50-க்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் கும்பலாக ஊருக்குள் புகுந்தது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் சிதறி ஓடினர். மேலும் காட்டு பன்றிகள் கூட்டம் விவசாய நிலங்களுக்குள் புகுந்தன. அதே பகுதியை சேர்ந்த விவசாயிகள் வேலுச்சாமி, பெருமாள், கணேஷ் ஆகியோரின் தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்தது.

    இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதும் விவசாயிகளே பன்றிகளை விரட்டி வனப்பகுதிக்குள் விட்டனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தண்ணீர் தட்டுப்பாடு, விலையின்மை உள்ளிட்டவைகளால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த நிலையில் காட்டு பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தி சென்றுள்ளன.

    இந்த பயிர்களை நடவு செய்ய கடன் வாங்கி இருந்தோம். தற்போது அதற்கு பணம் செலுத்த முடியாமல் அவதிக்குள்ளாகி வருகிறோம். எனவே அரசு எங்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்றனர்.

    ×